skip to Main Content

அகத்தியர்

அகத்தியர் (Agathiyar) என்பவர் தமிழி என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானும் ஆவார். [1] இவரே அகத்தியம் எனும் முதல் தமிழி என்ற தமிழ் மொழிக்கான இலக்கணம் முதலான நூல்களை இயம்பியவர். இந்நூல்களை பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அகத்தியம் பற்றிய யாதொரு குறிப்பும் தொல்காப்பியத்தில் எங்கும் குறிக்கப் பெறவில்லை.

Back To Top