skip to Main Content

சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது.

  1. முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்)
  2. இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்)
  3. மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்)
  4. நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்)
  5. ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்)
  6. ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்)
  7. ஏழாம் திருமுறை – சுந்தரர் (தேவாரம்)
  8. எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்
    • திருவாசகம்
    • திருக்கோவையார்
  9. ஒன்பதாம் திருமுறை
    • திருவிசைப்பா
      • திருமாளிகைத் தேவர்
      • சேந்தனார்
      • கருவூர்த்தேவர்
      • பூந்துருத்திநம்பி காடநம்பி
      • கண்டராதித்தர்
      • வேணாட்டடிகள்
      • திருவாலியமுதனார்
      • புருடோத்தமநம்பி
      • சேதிராசர்
    • திருப்பல்லாண்டு – சேதிராசர்
  10. பத்தாம் திருமுறை:
    • திருமந்திரம் – திருமூலர்
  11. பதினோராம் திருமுறை
    • திரு ஆலவாய் உடையார்
      • திருமுகப் பாசுரம்
    • காரைக்கால் அம்மையார்
      • திருலாலங்காட்டுத் திருப்பதிகம்
      • திரு இரட்டை மணிமாலை
      • அற்புதத்திருவந்தாதி
    • ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
      • சேத்திர வெண்பா
    • சேரமான் பெருமான் நாயனார்
      • பொன்வண்ணத்தந்தாதி
      • திருவாரூர் மும்மணிக்கோவை
      • திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
    • நக்கீர தேவ நாயனார்
      • கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
      • திருஈங்கோய்மலை எழுபது
      • திருவலஞ் சுழி மும்மணிக்கோவை
      • பெருந்தேவபாணி
      • கோபப் பிரசாதம்
      • கார் எட்டு
      • போற்றித் திருக்கலிவெண்பா
      • திருமுருகாற்றுப்படை
    • கல்லாட தேவ நாயனார்
      • திருக்கண்ணப்பதேவர் திருமறம்
    • கபிலதேவ நாயனார்
      • மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
      • சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
      • சிவபெருமான் திருஅந்தாதி
    • பரணதேவ நாயனார்
      • சிவபெருமான் திருவந்தாதி
    • இளம் பெருமான் அடிகள்
      • சிவபெருமான் மும்மணிக்கோவை
    • அதிரா அடிகள்
      • மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
    • பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:
      • கோயில் நான்மணிமாலை
      • திருக்கழுமல மும்மணிக்கோவை
      • திருவிடை மருதூர் மும்மணிக்கோவை
      • திருவேகம்பமுடையார் திருவந்தாதி
      • திருவொற்றியூர் ஒருபா ஒருபது
    • நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:
      • திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
      • கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
      • திருத் தொண்டர் திருவந்தாதி
      • ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
      • ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
      • ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
      • ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
      • ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
      • ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
      • திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
    • பன்னிரண்டாம் திருமுறை
      • பெரிய புராணம் – சேக்கிழார் பெருமான்
Back To Top