நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்[1]. சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் – இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.
- அதிபத்தர்
- அப்பூதியடிகள்
- அமர்நீதி நாயனார்
- அரிவட்டாயர்
- ஆனாய நாயனார்
- இசைஞானியார்
- இடங்கழி நாயனார்
- இயற்பகை நாயனார்
- இளையான்குடிமாறார்
- உருத்திர பசுபதி நாயனார்
- எறிபத்த நாயனார்
- ஏயர்கோன் கலிகாமர்
- ஏனாதி நாதர்
- ஐயடிகள் காடவர்கோன்
- கணநாதர்
- கணம்புல்லர்
- கண்ணப்பர்
- கலிய நாயனார்
- கழறிற்றறிவார்
- கழற்சிங்கர்
- காரி நாயனார்
- காரைக்கால் அம்மையார்
- குங்கிலியகலையனார்
- குலச்சிறையார்
- கூற்றுவர்
- கலிக்கம்ப நாயனார்
- கோச்செங்கட் சோழன்
- கோட்புலி நாயனார்
- சடைய நாயனார்
- சண்டேசுவர நாயனார்
- சக்தி நாயனார்
- சாக்கியர்
- சிறப்புலி நாயனார்
- சிறுதொண்டர்
- சுந்தரமூர்த்தி நாயனார்
- செருத்துணை நாயனார்
- சோமசிமாறர்
- தண்டியடிகள்
- திருக்குறிப்புத் தொண்டர்
- திருஞானசம்பந்தமூர்த்தி
- திருநாவுக்கரசர்
- திருநாளை போவார்
- திருநீலகண்டர்
- திருநீலகண்ட யாழ்ப்பாணர்
- திருநீலநக்க நாயனார்
- திருமூலர்
- நமிநந்தியடிகள்
- நரசிங்க முனையர்
- நின்றசீர் நெடுமாறன்
- நேச நாயனார்
- புகழ்சோழன்
- புகழ்த்துணை நாயனார்
- பூசலார்
- பெருமிழலைக் குறும்பர்
- மங்கையர்க்கரசியார்
- மானக்கஞ்சாற நாயனார்
- முருக நாயனார்
- முனையடுவார் நாயனார்
- மூர்க்க நாயனார்
- மூர்த்தி நாயனார்
- மெய்ப்பொருள் நாயனார்
- வாயிலார் நாயனார்
- விறன்மிண்ட நாயனார்