skip to Main Content

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கி.மு. 500-இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள[1] காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரின் முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் எனவும்; சங்கமருவிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பொருளடக்கம்
1 எட்டுத்தொகை நூல்கள்
2 பத்துப்பாட்டு நூல்கள்
3 பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

Back To Top