சைவத் திருமுறைகள்
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு…