குறள் – 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்…
