குறள் – 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்…
பதினெண் கீழ்க்கணக்கு
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள் நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது கார் நாற்பது களவழி நாற்பது ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை…
பதினெண்மேற்கணக்கு
தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள். பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை…
பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள், திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப் பாலை மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை…
